search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதுளம் பழ சூப்"

    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மாதுளை, பீட்ரூட் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாதுளை முத்துக்கள் - ஒரு கப்,
    துருவிய பீட்ரூட் - கால் கப்,
    தக்காளி - 2,
    சோள மாவு - 2 டீஸ்பூன்,
    வெண்ணெய் - அரை டீஸ்பூன்,
    கிராம்பு - 2,
    மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாதுளை முத்துக்கள், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து சூடானதும் கிராம்பு, சோள மாவு சேர்த்து லேசாக வறுக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

    உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான மாதுளை - பீட்ரூட் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×